தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

MS Dhonis contempt of court case will come to hearing on 15th june in Madras High Court

கடந்த 2013 ஆண்டு ஐபிஎல் சூதாட்டத்தில் தோனி ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த சம்பத் குமார் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். இதன் எதிரொலி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார் விசாரணை நடத்தினார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

TNPL 2023: கடைசி வரை போராடிய துஷார் ரஹேஜா: ஓபனிங் மேட்சிலேயே 70ல் ஜெயிச்ச லைகா கோவை கிங்ஸ்!

இதையடுத்து, தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி நடந்து கொண்டதாகவும், ரூ.100 கோடி இழப்பீடு தரக் கோரியும் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சம்பத் குமார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட கேஎல் ராகுல்: வைரலாகும் மாணவனின் வீடியோ!

இதைத் தொடர்ந்து தோனி தாக்கல் செய்த மனுவிற்கு, சம்பத் குமார் பதில் மனு தாக்கல் செய்தார். இதில், நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு என்பதால், சட்டப்படி தண்டிப்பட வேண்டும் என்று தோனி தரப்பில் கோரப்பட்டது.

இந்த நிலையில், தோனி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPL 2023: ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர்: ஐபிஎல்லில் விட்டதிலிருந்து தொடங்கிய சாய் சுதர்ஷன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios