TNPL 2023: கடைசி வரை போராடிய துஷார் ரஹேஜா: ஓபனிங் மேட்சிலேயே 70ல் ஜெயிச்ச லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்கியது. இம்பேக்ட் பிளேயர் மற்றும் டிஆர்எஸ் என்று புதிய விதிமுறைகளுடன் இந்த சீசன் தொடங்கியுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பா11சி (ரூபி) திருச்சி, சீகம் மதுரை பாந்தர்ஸ் என்று மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன.
மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட கேஎல் ராகுல்: வைரலாகும் மாணவனின் வீடியோ!
இன்று தொடங்கிய டிஎன்பிஎல் 7ஆவது தொடரின் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழர்கள் (ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்) அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணியில், தொடக்க வீரர் சச்சின் 2 ரன்களில் வெளியேற சுரேஷ் குமார் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராம் அரவிந்த் அடுத்த பந்திலேயே வெளியேறினார். இருவரும் விஜய் சங்கர் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு சாய் சுதர்ஷன் மற்றும் முகிலேஷ் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 120 ரன்கள் தான் வரும் என்று எண்ணிய நிலையில், சாய் சுதர்ஷன் அதிரடி காட்டத் தொடங்கினார். இந்த சீசனின் முதல் அரைசதமும் அடித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் விளாசினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது. இதில், சாய் சுதர்ஷன் 86 ரன்கள் குவித்த நிலையில் கடைசி பந்தில் ரன் அவுட் செய்யப்பட்டார். கேப்டன் ஷாருக்கான் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
TNPL 2023: முதல் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பவுலிங்!
பின்னர் 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது. இதில் விக்கெட் கீப்பர் துஷார் ரஹாஜா கடைசி வரை போராடி 33 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற கடைசியாக 20 ஓவர்களில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்து வீச்சு தரப்பில் லைகா கோவை கிங்ஸ் அணி சார்பில் கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும், கௌதம் தாமரை கண்ணன், முகிலேஷ் மற்றும் ஜாதவேத் சுப்ரமணியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:
பால்சந்தர் அனிருத், NS சதுர்வேத், S கணேஷ், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), P புவனேஸ்வரன், S அஜித் ராம், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), G பெரியசாமி, S மணிகண்டன்.
லைகா கோவை கிங்ஸ்:
பி சச்சின், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக் கான் (கேப்டன்), எம் முகமது, கிரண் ஆகாஷ், மணிமாறன் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், கே கௌதம் தாமரை கண்ணன்