Asianet News TamilAsianet News Tamil

செம மேட்ச்.. சிம்மன்ஸ் - டேரன் பிராவோ அதிரடி அரைசதம்.. 4வது முறையாக சிபிஎல் டைட்டிலை வென்ற நைட் ரைடர்ஸ்

கரீபியன் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் செயிண்ட் லூசியா ஜூக்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றது.
 

trinbago knight riders beat st lucia zouks in cpl 2020 final and win title 4th time
Author
Trinidad and Tobago, First Published Sep 10, 2020, 11:30 PM IST

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடந்தது. இந்த தொடரின் இறுதி போட்டிக்கு செயிண்ட் லூசியா ஜூக்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய 2 அணிகளும் முன்னேறின.

இறுதி போட்டி டிரினிடாட்டில் இன்று நடந்தது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு, ஜூக்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஜூக்ஸ் அணியின் தொடக்க வீரர்  கார்ன்வால் வெறும் 8 ரன்களில் 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மார்க் டெயாலுடன் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ஃப்ளெட்சர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். டெயாலும் ஃப்ளெட்சரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 7 ஓவரில் 67 ரன்களை சேர்த்தனர். மார்க் டெயால் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடித்த ஃப்ளெட்சர் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

12வது ஓவரின் முதல் பந்தில் ஃப்ளெட்சர் அவுட்டாகும்போது, செயிண்ட் லூசியா அணியின் ஸ்கோர் 89. அதன்பின்னர் ரோஸ்டான் சேஸ் 22 ரன்னிலும் நஜிபுல்லா ஜாட்ரான் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, 15வது ஓவரிலேயே 120 ரன்களை கடந்துவிட்டது செயிண்ட் லூசியா அணி. எஞ்சிய 5 ஓவரில் 40-50 ரன்கள் அடித்திருக்கலாம். விக்கெட்டும் கையில் இருந்தது. ஆனால் அதன்பின்னர் முகமது ஷமி, கேப்டன் டேரன் சமி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, டெயிலெண்டர்களும் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 19.1 ஓவரில் 154 ரன்களுக்கு சுருண்டது செயிண்ட் லூசியா அணி. நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு அருமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

trinbago knight riders beat st lucia zouks in cpl 2020 final and win title 4th time

இதையடுத்து 155 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக லெண்டல் சிம்மன்ஸும் டியான் வெப்ஸ்டரும் இறங்கினர். வெப்ஸ்டர் 3வது ஓவரிலேயே 5 ரன்னிலும் சேஃபெர்ட் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து சிம்மன்ஸுடன் டேரன் பிராவோ ஜோடி சேர்ந்தார். இலக்கு கடினமானது இல்லையென்பதால், விக்கெட் விழாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினால், பின்னர் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுவிடலாம் என்பதால், டேரன் பிராவோ நிதானமாக ஆடினார். ஆனால் சிம்மன்ஸ் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 10 ஓவரில் நைட் ரைடர்ஸ் அணி 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. ஆனால் அதன்பின்னர் டேரன் பிராவோ அதிரடியாக ஆட தொடங்கினார். சிம்மன்ஸ் ஒருமுனையில் அதிரடியாக ஆட, டேரன் பிராவோவும் அதிரடியை தொடங்கியதையடுத்து ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

Also Read - ஐபிஎல் 2020: சிஎஸ்கேவில் ரெய்னாவுக்கு மாற்று வீரர் இவருதான்..! ஷேன் வாட்சன் அதிரடி

சிம்மன்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து டேரன் பிராவோடும் அரைசதம் அடித்தார். 15 ஓவருக்கு பின்னர் அடுத்த 2-3 ஓவர்களில் இருவரும் தாறுமாறாக அடித்து ஆட 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக கரீபியன் பிரீமியர் லீக் டைட்டிலை வென்றது. சிம்மன்ஸ் 49 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்களையும் டேரன் பிராவோ 47 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 58 ரன்களையும் அடித்து கடைசி வரை களத்தில் நின்று டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர்.

Also Read - ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனில் மரண அடி விழுவது உறுதி.. காரணம் இதுதான்

ஏற்கனவே 2015, 2017 மற்றும் 2018 ஆகிய 3 சீசன்களில் டைட்டிலை வென்றிருந்த நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios