TNPL 2022: ஃபைனலில் அடித்து ஆடிய மழை..! கோப்பையை பகிர்ந்துகொண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக் ஃபைனல் மழையால் தடைபட்டது. அதனால் ஃபைனலில் மோதிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்தது. ஃபைனலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
கோயம்பத்தூரில் நடந்தது இந்த போட்டி. இரவு 7.15 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மழையால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிங்க - WI vs IND: 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி.! என்னென்ன மாற்றங்கள்..?
முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 65 ரன்களை குவித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. சாய் சுதர்சனின் அதிரடி அரைசதத்தால் 17 ஓவரில் 138 ரன்கள் அடித்தது லைகா கோவை கிங்ஸ்.
இதையும் படிங்க - ENG vs SA: ஷம்ஸி 5 விக்கெட்.. 3வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
17 ஓவரில் 139 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 ஓவரில் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அத்துடன் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. ஆட்டம் முடிவில்லாமல் முடிந்தது. அதனால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.