NZ vs IND: இந்தியாவிற்கு எதிராக ஹாட்ரிக்..! டி20 கிரிக்கெட்டில் 2வது ஹாட்ரிக்கை வீழ்த்தி டிம் சௌதி சாதனை
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டியில் டிம் சௌதி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, சூர்யகுமார் யாதவின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது.
51 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் 2வது சதம் இது.
NZ vs IND: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியை 126 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இந்திய இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய டிம் சௌதி, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஏற்கனவே 2010ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்திய டிம் சௌதி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது முறையாக ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.