Asianet News TamilAsianet News Tamil

NZ vs IND: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

india beat new zealand by 65 runs in second t20 and lead the series by 1 0
Author
First Published Nov 20, 2022, 4:09 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

செம டேலண்ட் அந்த பையன்.. தொடர்ந்து 10 சான்ஸ் கொடுத்துட்டு முடிவு எடுங்க..! இளம் வீரருக்கு ரவி சாஸ்திரி ஆதரவு

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, ஆடம் மில்னே, லாக்கி ஃபெர்குசன்.

முதலில் பேட்டிங்  ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும் ரிஷப் பண்ட்டும் களமிறங்கினர். ரிஷப் பண்ட் 13 பந்தில் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டுமொரு முறை ஏமாற்றமளித்தார். இஷான் கிஷன் 31 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (13), ஹர்திக் பாண்டியா(13) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். தனி ஒருவனாக நின்று நியூசிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கிய சூர்யகுமார் யாதவ் 51 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது இந்திய அணி.

192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 61 ரன்கள் அடித்தார். ஃபின் ஆலன்(0), டெவான் கான்வே(25), க்ளென் ஃபிலிப்ஸ் (12), டேரைல் மிட்செல்(10) என முக்கியமான வீரர்கள் அனைவரும் சொதப்ப, அந்த அணி 18 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஒரு ஆள் ஒரே நேரத்துல 2 இடத்துல இருக்கமுடியாது! டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு தினேஷ் கார்த்திக் பதிலடி

 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு அபார வெற்றி பெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios