Child Cricket Video: புரஃபஷனல் கிரிக்கெட்டர் போன்று கிரிக்கெட் விளையாடிய சுட்டிக் குழந்தையின் வீடியோ வைரல்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்குவதே நமக்கு வேலையா போச்சு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அமைந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த அண்டர்19 கிரிக்கெட் உலகக் கோப்பையும் அமைந்துவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டி மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுக்க, பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கண்களில் கண்ணீரை வர வைத்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் நடந்த அண்டர்19 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா 19 விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
CSK Brand Ambassador: சிஎஸ்கேயின் பிராண்ட் அம்பாசிடராக கத்ரினா கைஃப் ஒப்பந்தம்!
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5 வயதுக்கு கீழ் உள்ள சுட்டிக் குழந்தை ஒன்று ஒரு புரஃபஷனல் கிரிக்கெட் வீரர் எப்படி கிரிக்கெட் விளையாடுவாரோ அதே போன்று, கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த குழந்தை பல விதமான ஷாட்டுகளை எதிர்கொண்டு சிக்ஸர் அடிப்பது, பவுண்டரி அடிப்பது என்று அசத்தும் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது.
இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் மினி ஸ்டீவ் ஸ்மித் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் 25.7 கோடி கொண்ட சிஎஸ்கே ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் ஆஸ்திரேலியா அதிக ஐசிசி டிராபிகளை வெல்வதற்கு காரணம் என்றும், குழந்தை பருவத்திலிருந்தே பயிற்சியும், பெற்றோரது ஆதரவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.