Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ: மும்பை போலீசுக்கு மிரட்டல் – இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறை!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக மும்பை போலீஸுக்கு துப்பாக்கி, வெடி குண்டுகள் தொடர்பான மிரட்டல் செய்தி வந்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

threatening message received by mumbai police ahead of IND vs NZ 1st Semi Final Match rsk
Author
First Published Nov 15, 2023, 12:17 PM IST | Last Updated Nov 15, 2023, 12:17 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக மும்பை காவல்நிலையத்திற்கு மிரட்டல் செய்து வந்துள்ளது. இது குறித்து மும்பை போலீஸ் வட்டாரத்தில் கூறியிருப்பதாவது: இன்று வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு மோசமான சம்பவம் நிறைவேற்றப்படும் என்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மும்பை காவல்துறைக்கு X இல் (முன்னர் டுவிட்டர்) மிரட்டல் செய்தியை வெளியிட்டார்.

தப்பி தவறி எனது வாயில் வந்துவிட்டது, எந்த உள்நோக்கமும் இல்லை; ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட அப்துல் ரசாக்!

மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் தனது பதிவில் மும்பை காவல்துறையைக் குறி வைத்து துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்களை புகைப்படத்தில் காட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

India vs New Zealand:இது ரிவெஞ்சுக்கான காரணம் – 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios