இது நாங்க தோற்க வேண்டிய போட்டி – ரோவ்மன் பவல்!
நாங்கள் தோற்க வேண்டிய போட்டியில் இந்திய அணி தோற்றுள்ளது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடியது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பவல் 48 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 41 ரன்களும் எடுத்தனர்.
NCC Cadets: என்சிசி வீரர்களை தாக்கிய மாணவர் இடைநீக்கம்; வீடியோ வைரலான நிலையில் கல்லூரி நடவடிக்கை!
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். சுப்மன் கில் 3 ரன்னிலும், இஷான் கிஷான் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை பின் தள்ளி நம்பர் 1 வீரரான தமிழக வீரர் குகேஷ்!
ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12, அக்ஷர் படேல் 13, அர்ஷ்தீப் சிங் 12 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி 4 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக வெஸ்ட் இண்டிஸ் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
WI vs IND 1st T20 Match: இத்தனை பேட்ஸ்மேன்கள் இருந்தும் 150 ரன்களுக்கு போராடிய டீம் இந்தியா தோல்வி!
போட்டிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியிருப்பதாவது: இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்தப் போட்டியில் நாங்கள் தோற்றிருக்க வேண்டும். ஆனால், இந்திய அணியில் ஆரம்பம் முதலே எந்தப் பேட்ஸ்மேனும் செட் ஆகவில்லை.
ஆதலால், எங்களால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்த மைதானத்தில் பேட்டிங் ஆடுவது ஒன்றும் சர்வ சாதாரணமல்ல. எங்களது அணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்கள், ஹெட்மயர், பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோரது சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.தொடக்க வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி ரன்கள் குவித்தால் அதிக ரன்கள் சேர்க்க முடியும். பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக செயல்பட்டார்.