NCC Cadets: என்சிசி வீரர்களை தாக்கிய மாணவர் இடைநீக்கம்; வீடியோ வைரலான நிலையில் கல்லூரி நடவடிக்கை!
தானேயில் உள்ள பண்டோத்கர் கல்லூரியில் என்சிசி வீரர்களை மாணவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தானேவில் உள்ள பண்டோத்கர் கல்லூரியின் இளங்கலை அறிவியல் மாணவர் ஒருவர் ஜோஷி பெடேகர் கல்லூரியின் வளாகத்தில் என்சிசி கேடட்களைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை பின் தள்ளி நம்பர் 1 வீரரான தமிழக வீரர் குகேஷ்!
தானேயில் உள்ள ஜோஷி பெடேகர் கல்லூரி, பந்தோத்கர் கல்லூரி மற்றும் VPM பாலிடெக்னிக் ஆகிய இரு கல்லூரிகளுடன் இணைந்து ஒரு பெரிய தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC) பிரிவை நடத்துகிறது. இந்த என்சிசி பிரிவின் உடல் பயிற்சி பொதுவாக ஜோஷி பெடேகர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
WI vs IND 1st T20 Match: இத்தனை பேட்ஸ்மேன்கள் இருந்தும் 150 ரன்களுக்கு போராடிய டீம் இந்தியா தோல்வி!
அப்போது சில என்சிசி வீரர்களை புஷ் அப் நிலையில் இருக்கும் படியும், அவர்களது முகம் தெரியாத நிலையிலும் சக வீரர் ஒருவர் அவர்களது காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளார். அதில், அறிவியல் மாணவர் ஒரு அவர்களை மூங்கில் குச்சியால் பின்புறம் தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜோஷி பெடேகர் கல்லூரி முதல்வர் சுஜித்ரா நாயக் கூறியிருப்பதாவது: இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் பந்தோத்கர் கல்லூரி அறிவியல் மாணவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து, அவர் இடைநீக்கம் செய்யப்ப்படுள்ளார்.
எந்தவித அச்சமும் இன்றி நிர்வாகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய நடத்தையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வீடியோவை எடுத்தவர்கள் எங்களை அணுகியிருந்தால், நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்போம் என்று நாயக் கூறினார்.
மேலும், இதுபோன்ற ஆக்ரோஷமான சம்பவத்திற்கு எதிராக மாணவர்களை விழிப்படையச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது"நாங்களும் அத்தகைய விழிப்புணர்வை கொண்டு வருவோம்," என்று அவர் கூறினார். என்சிசி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில், இது கல்லூரிகளில் என்சிசி செயல்பாடு குறித்த விவாதத்திற்கு வழி வகுத்துள்ளது.