Asia Cup: பந்து பேட்டில் படவே இல்ல.. ஆனால் பதும் நிசாங்கா அவுட்..! தேர்டு அம்பயரின் சர்ச்சை முடிவு
ஆசிய கோப்பை தொடரில் இலங்கை வீரர் பதும் நிசாங்காவிற்கு தேர்டு அம்பயர் சர்ச்சைக்குரிய அவுட் கொடுத்தது பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்று துபாயில் நடந்துவரும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா, மதீஷா பதிரனா.
இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலா அந்த பையனைத்தான் எடுத்திருக்கணும்! பாக்.,முன்னாள் வீரர் பளீச்
ஆஃப்கானிஸ்தான் அணி:
ரஹ்மதுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா சேஸாய், இப்ராஹிம் ஜட்ரான், கரிம் ஜனத், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயரவில்லை. இலங்கை அணியில் பானுகா ராஜபக்சா தான் அதிகபட்சமாக 38 ரன்கள் அடித்தார். ஆனால் அவரும் ரன் அவுட்டாகி வெளியேறினார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 105 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது.
இலங்கை பேட்டிங்கின்போது தேர்டு அம்பயரின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா ஆகிய இருவரையும் ஃபரூக்கி வீழ்த்தினார். நவீன் உல் ஹக் வீசிய 2வது ஓவரின் பதும் நிசாங்கா ஆட்டமிழந்தார். பதும் நிசாங்காவிற்கு விக்கெட் கீப்பிங் கேட்ச் முறையில் அவுட் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு
ஆனால் பதும் நிசாங்கா அம்பயரின் முடிவை ரிவியூ செய்தார். அதை ரீப்ளே செய்து பார்த்தபோது, பந்து பேட்டில் பட்டதாக தெரியவில்லை. பந்து பேட்டை கடக்கும்போது வேவ் எழவில்லை. அதனால் இலங்கை வீரர்கள், டிரெஸிங் ரூம், இலங்கை ரசிகர்கள் என அனைவரும் திருப்தி அடைந்தனர். ஆனாலும் தேர்டு அம்பயர் அவுட் கொடுத்தார். தேர்டு அம்பயரின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.