IND vs WI 1st Test: இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும்? டீம் இந்தியா பிளேயிங் 11!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை டொமினிகாவில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி தொடங்கியுள்ளது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும் தனது முதல் ஹோம் டெஸ்ட் தொடரை தொடங்குகிறது.
லண்டனில் காஃபி கப்புடன் உலா வரும் அனுஷ்கா சர்மா; வீடியோ எடுக்கும் விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு டொமினிகா மைதானத்தில் நடக்கிறது.
இந்தியாவை வீழ்த்தும் நேரம் வந்து விட்டது – பிரையன் லாரா நம்பிக்கை!
இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் அணி:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கன்சிஃப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ரேமன் ரைஃபர்
இந்தியா 13 ஆவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா 5 முறையும், வெஸ்ட் இண்டீஸ் 7 முறையும் வென்றுள்ளன. இந்த நிலையில், நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் யாரெல்லாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். சட்டேஸ்வர் புஜாராவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழில் ஒரு கெட்ட வார்த்தை கூட தெரியாது, மற்ற மொழிகளில் தெரியும் – எம்.எஸ்.தோனி!
ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரரில் இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுப்மன் கில் 3ஆவது வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நம்பர் 4 மற்றும் 5ஆவது இடங்களில் விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோரும், 6ஆவது இடத்தில் கேஎஸ் பரத் அல்லது இஷான் கிஷானும் களமிறங்கப்படலாம். சிறந்த ஆல் ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இடம் பெறக்கூடும். இவர்களது வரிசையில் அடித்து ஆடக் கூடிய வீரர்களில் ஷர்துல் தாக்கூர் 9ஆவது வீரராக களமிறங்கப்படலாம்.
வர்ணனையாளராக அறிமுகமாகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா!
கடைசியாக ஜெயதேவ் உனத்கட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெறலாம். முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் முழு சுமையையும் சிராஜ் தனது தோளில் சுமந்து கொண்டுள்ளார். ஒருவேளை 3ஆவது வேகப்பந்து வீச்சாளராக முகேஷ் குமார் அணியில் இடம் பெற்றால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்.
5ஆவது பவுலராக யாருக்கு வாய்ப்பு? முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனத்கட் கடும் போட்டி!
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்.