லண்டனில் காஃபி கப்புடன் உலா வரும் அனுஷ்கா சர்மா; வீடியோ எடுக்கும் விராட் கோலி!
லண்டன் சென்ற விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா பிறந்தாள். இந்த நிலையில், கடந்த ஜூன் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவை வீழ்த்தும் நேரம் வந்து விட்டது – பிரையன் லாரா நம்பிக்கை!
இதையடுத்து, நாளை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடக்கிறது. இதற்கிடையில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஓய்வு நேரத்தை விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் லண்டனில் செலவிட்டுள்ளார். லண்டனில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதும், வெளியில் சென்று வருவதுமாக இருவரும் இருந்துள்ளனர்.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
இந்த நிலையில், தான் அனுஷ்கா சர்மா கையில் காஃபி கப் வைத்துக் கொண்டு லண்டன் வீதிகளில் உலா வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் ஒரு கெட்ட வார்த்தை கூட தெரியாது, மற்ற மொழிகளில் தெரியும் – எம்.எஸ்.தோனி!