இந்தியாவை வீழ்த்தும் நேரம் வந்து விட்டது – பிரையன் லாரா நம்பிக்கை!
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான வெற்றிப் பாதைக்கு செல்லும் என்று முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் டொமினிகா மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
உலகக் கோப்பை 2023: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் அணி:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கன்சிஃப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ரேமன் ரைஃபர்
தமிழில் ஒரு கெட்ட வார்த்தை கூட தெரியாது, மற்ற மொழிகளில் தெரியும் – எம்.எஸ்.தோனி!
இந்த நிலையில், இந்த டெஸ்ட் தொடரில், இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான வெற்றிப் பாதைக்கு செல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், 2023-2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியில் இரு அணிகளும் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன.
மனைவியுடன் சென்னையில் தோனி.. சிறப்பாக வெளியிடப்பட்ட LGM பட ட்ரைலர் - கூர்க் ட்ரிப் போக ரெடியா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டியில் 9 அணிகள் இடம் பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரில் பங்கேற்கின்றன. இதில் 3 ஹோம் மற்றும் 3 அவே டெஸ்ட் தொடர்கள் என்று 6 தொடர்கள் நடத்தப்படும். ஒவ்வொரு தொடரும் 2 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக இருக்கும். இதில், மொத்தமாக 27 தொடர்கள் மற்றும் 68 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
5ஆவது பவுலராக யாருக்கு வாய்ப்பு? முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனத்கட் கடும் போட்டி!
முதல் வெளியூர் போட்டியில் இந்தியா தனது முதல் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் ஹோம் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் தான் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் என்று பிரையன் லாரா கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களை உள்ளடக்கிய கிரெய்க் பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது. இந்த தொடரில் வீரர்ர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ் ஆகியோர் திறமையான பேட்ஸ்மேன்கள். வீரர்கள் எந்த வயதில் இருந்தாலும் கற்றுக்கொள்ள விரும்பும் மனப்பான்மையை வகுத்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ரொம்பவே ஸ்பெஷல்: சென்னைக்காரங்க என்னை எப்போதோ தத்தெடுத்துவிட்டனர் – எம்.எஸ்.தோனி!