இந்திய அணியின் வார்ம் அப் போட்டி எப்போது? எத்தனை போட்டிகளில் விளையாடுகிறது?
ஜூன் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வரும் 1 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான வார்ம் அப் போட்டிகளில் விளையாடுகிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியின் ஒரு பேட்ஜ் ஏற்கனவே அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளது. 2ஆவது பேட்ஜ் வீரர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விராட் கோலி மட்டும் தனிப்பட்ட காரணத்திற்காக வார்ம் அப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஓமன், உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள், வங்கதேசம், நமீபியா, அயர்லாந்து என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி டல்லாஸில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் வார்ம் அப் போட்டிகளில் இடம் பெற்று விளையாடுகின்றன. அதன்படி நேற்று தொடங்கிய முதல் வார்ம் அப் போட்டியில் கனடா மற்றும் நேபாள் அணிகள் மோதின.
மே 28:
ஓமன் – பப்புவா நியூ கினியா – பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியம் – டிரினிடாட்.
நமீபியா – உகாண்டா- பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியம் – டிரினிடாட்.
இலங்கை – நெதர்லாந்து – பிரோவார்ட் கவுண்டி ஸ்டேடியம்.
வங்கதேசம் – அமெரிக்கா – கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம்
மே 29:
ஆஸ்திரேலியா – நமீபியா – குயீன்ஸ் பார்க் ஓவல் – டிரினிடாட்
தென் ஆப்பிரிக்கா அணியானது அந்த அணிக்குள்ளாகவே வார்ம் அப் போட்டிகளில் விளையாடுகிறது.
ஆப்கானிஸ்தான் – ஓமன் - குயீன்ஸ் பார்க் ஓவல் – டிரினிடாட்
கொல்கத்தா அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மே 30:
நேபாள் – அமெரிக்கா - கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம் – டெக்ஸாஸ்
ஸ்காட்லாந்து – உகாண்டா – பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியம்
மே 31:
நெதர்லாந்து – கனடா - கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம் – டெக்ஸாஸ்
நமீபியா – பப்புவா நியூ கினியா - பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியம் – டிரினிடாட்
வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா – குயீன்ஸ் பார்க் ஓவல் டிரினிடாட்
அயர்லாந்து – இலங்கை - பிரோவார்ட் கவுண்டி ஸ்டேடியம்
ஸ்காட்லாந்து – ஆப்கானிஸ்தான் – குயீன்ஸ் பார்க் ஓவல் – டிரினிடாட்
ஜூன் 1:
வங்கதேசம் – இந்தியா – நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்