MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எந்த வீரரும் படைக்காத சாதனை: 3ஆவது முறையாக மதிப்பு மிக்க வீரருக்கான விருது வென்று சுனில் நரைன் சாதனை!

எந்த வீரரும் படைக்காத சாதனை: 3ஆவது முறையாக மதிப்பு மிக்க வீரருக்கான விருது வென்று சுனில் நரைன் சாதனை!

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், கேகேஆர் வீரர் சுனில் நரைன் 3ஆவது முறையாக மதிப்புமிக்க வீரருக்கான விருது வென்று சாதனை படைத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 27 2024, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Most Valuable Player Sunil Narine

Most Valuable Player -Sunil Narine

ஒரு வழியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நிறைவு பெற்றுள்ளது. பிசிசிஐயின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 திருவிழா கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Most Valuable Player

Most Valuable Player

இந்த தொடரில் 10 அணிகள் இடம் பெற்று விளையாடிய நிலையில் கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில், ஆர்சிபி எலிமினேட்டரில் வெளியேற, ஆர்ஆர் அணி 2ஆவது குவாலிஃபையர் சுற்றுடன் வெளியேறியது.

37
Most Valuable Player (488 runs and 17 wickets)

Most Valuable Player (488 runs and 17 wickets)

கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார்.

47
IPL 2024 KKR Champions

IPL 2024 KKR Champions

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது. பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ரன்களில் வெளியேறினார்.

57
Most Valuable Player: 488 runs and 17 wickets

Most Valuable Player: 488 runs and 17 wickets

இறுதியாக வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும் எடுக்கவே 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது. சாம்பியனான கேகேஆர் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.

67
MVP award in IPL thrice

MVP award in IPL thrice

இந்த நிலையில் தான் கேகேஆர் வெற்றிக்கு மூல காரணமாக இருந்த சுனில் நரைனுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான விருது வழங்கப்பட்டது. அதோடு, ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக மதிப்பு மிக்க வீரருக்கான Most Valuable Player விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

77
Sunil Narine, Most Valuable Player Award 2024

Sunil Narine, Most Valuable Player Award 2024

தான் அறிமுகமான 2012 ஐபிஎல் சீசனில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் 357 ரன்களோடு, 17 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் 488 ரன்களோடு, 17 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

வேறு எந்த வீரரும் செய்யாத சாதனையை சுனில் நரைன் இதன் மூலமாக படைத்துள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கௌதம் கம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மிட்செல் ஸ்டார்க்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சுனில் நரைன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved