IND vs NZ: அவரு அணியில் தேவையே இல்ல.. அந்த பையனையாவது ஆடவைக்கலாம்..! 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the second t20 against new zealand

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

2வது டி20 போட்டி நாளை ஜனவரி 29 லக்னோவில் நடக்கிறது. இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், இந்த போட்டியில் ஜெயித்தால் தான் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால் வெற்றி கட்டாயத்தில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.

வெறும் இரண்டே ஆண்டில் தோனி, ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

2வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். தீபக் ஹூடா பேட்டிங்கில் பெரிதாக சோபிப்பதில்லை. முதல் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் வாய்ப்பிருந்தும் அவரால் அதை செய்ய முடியவில்லை. 10 பந்தில் 10 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். எனவே அவரது இடத்தை வீணடிக்கக்கூடாது. முதல் போட்டியில் பென்ச்சில் இருந்த பிரித்வி ஷாவை ஷுப்மன் கில்லுடன் ஓபனிங்கில் இறக்கிவிட்டு, இஷான் கிஷனை 5ம் வரிசையில் இறக்கலாம். ஹர்திக் பாண்டியா 6ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு தடை விதிக்கணும் - காம்ரான் அக்மல்

உத்தேச இந்திய அணி:

பிரித்வி ஷா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios