டி20 உலக கோப்பை: நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
டி20 உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அரையிறுதிக்கான 4 அணிகளை முடிவு செய்யும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக விளையாடி த்ரில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா - நெதர்லாந்து இடையேயான போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 12.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா - நெதர்லாந்து போட்டிக்கு முன்பாக, இன்று தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியும் சிட்னியில் நடக்கும் நிலையில், ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. அதே சிட்னி மைதானத்தில் தான் இந்திய அணி ஆடும் போட்டியும் நடக்கவுள்ளதால் மழை அபாயம் உள்ளது. மழை இல்லாமல் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியை முழுமையாக ஆடி வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. ரசிகர்களும் அந்த போட்டியை முழுமையாக காணும் ஆர்வத்தில் உள்ளனர்.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், அதே வின்னிங் காம்பினேஷனை மாற்ற விரும்பாது. எனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கும்.
சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.