Asianet News TamilAsianet News Tamil

BAN vs IND: முதல் டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு..? உத்தேச ஆடும் லெவன்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the first test against bangladesh
Author
First Published Dec 11, 2022, 9:56 PM IST

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொட ர் நடக்கவுள்ளது. வரும் 14ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் என்பதால் இந்த தொடரின் 2 போட்டிகளிலும் ஜெயித்தால் தான் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். அந்தவகையில், இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியம்.

ஒரே இரட்டை சத இன்னிங்ஸில் சீனியர் வீரரின் கெரியரை காலி செய்த இஷான் கிஷன்

ஆனால் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி, ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக ஆடவில்லை. இவர்கள் மூவரும் இந்த தொடரிலிருந்து விலகிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன், நவ்தீப் சைனி, ஜெய்தேவ் உனாத்கத், சௌரப் குமார் ஆகிய 4 வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா ஆடாததால் டெஸ்ட் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணை கேப்டனாக செயல்படுகிறார். வரும் 14ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட்டில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். அதன்பின்னர் புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், சிராஜ் ஆகியோருடன் உமேஷ் யாதவ் - ஜெய்தேவ் உனாத்கத் ஆகிய இருவரில் ஒருவரும் ஆடுவார்கள்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்/ஜெய்தேவ் உனாத்கத்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios