Asianet News TamilAsianet News Tamil

ரூ.2500 கோடி: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக 2028 ஆம் ஆண்டு வரையில் தொடரும் ரத்தன் டாடாவின் டாடா நிறுவனம்!

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக ரத்தன் டாடாவின் டாடா நிறுவனம் வரும் 2028 ஆண்டுகள் வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Tata has extended the IPL title sponsorship rights for next 5 years whopping Rs.2500 crores rsk
Author
First Published Jan 20, 2024, 11:00 AM IST

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இதில், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் ரூ.24.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

தொட்டுடேன்ல….ஓடிச் சென்று எல்லை கோட்டை தொட்டு கபடி விளையாடிய ரிஸ்வான் – நக்கல் பண்ண ஷிகர் தவான்!

இந்த நிலையில் கடந்த 16ஆவது ஐபிஎல் சீசன் வரையில் ஐபிடல் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த டாடா நிறுவனம் மேலும், 5 ஆண்டு காலத்திற்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 வரையிலான 2 ஆண்டுகள் ஒப்பந்தத்திற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக டாடா நிறுவனம் இருந்தது. அதற்கு முன்னதாக, 2018 - 2021 வரை ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ நிறுவனம் ரூ.2200 கோடி பிசிசிஐக்கு வழங்கியது.

ஜப்பானிடம் தோல்வி; பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்தியா!

இதையடுத்து 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த டாடா நிறுவனம் ரூ.670 கோடி வழங்கியது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட டெண்டரின் படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது 5 ஆண்டுகள் டைட்டில் ஸ்பான்சர் உரிமைக்கான அடிப்படை விலையை ஆண்டுக்கு ரூ.350 வீதம் மொத்தமாக ரூ.1750 கோடி என்று நிர்ணயித்திருந்தது.

பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி!

இந்த நிலையில் தான் அதனை டாடா நிறுவனம் ரூ.500 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி என்று 2024 முதல் 2028 ஆம் ஆண்டுகள் வரையில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வரும் மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரில் 74 போட்டிகள் நடக்க இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த போட்டிகளை மேலும் அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் 2025 ஆண்டு 84 போட்டிகளும், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் 94 போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Khelo India: விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, மாரியப்பன் தமிழ் மண்ணில் தான் பிறந்தார்கள் – பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios