கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் துவக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, தங்கமகன் மாரியப்பன் என்று எல்லோருமே தமிழகத்தில் தான் பிறந்தார்கள் என்று பேசியுள்ளார்.

இந்தியாவின் 13ஆவது மற்றும் தமிழகத்தில் 6ஆவது முறையாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுகிறது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக இன்று சென்னை வந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வழக்கம் போல், வணக்கம் சென்னை என்று தனது உரையை தொடங்கினார்.

NZ vs PAK 4th T20I: காலில் விழாத குறையா அடி வாங்கிய பாகிஸ்தான் - 4ஆவது டி20 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி!

மேலும், பேசிய அவர் கூறியிருப்பதாவ்து: 13ஆவது கேலோ இந்தியா விளையாட்டுக்களுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். 2024 ஆம் ஆண்டினை துவக்க இது அற்புதமான வழியாகும். நாடெங்கிலுமிருந்து சென்னைக்கு வந்திருக்கும் அனைத்து தடகள வீரர்களுக்குக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் இதமான வரவேற்பு, அழகிய தமிழ் மொழி, கலாச்சாரம், உணவு ஆகியன உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போன்ற ஒரு உணர்வை உங்களுக்கு அளித்திருக்கும். கேலோ இந்தியா விளையாட்டுகள் உங்களது திறமைகளை காட்சிப்படுத்த உங்களுக்கு வாய்ப்பை அளிக்கும். இந்த மண்ணில் தான் டென்னிஸ் விளையாட்டில் கொடி கட்டி பறந்த அமிர்தராஜ் சகோதரர்கள் பிறந்தார்கள். இதே மண்ணில் தான் ஹாக்கி அணியின் கேப்டன் பாஸ்கரனும் பிறந்தார். இவரது தலைமையிலான அணி தான் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது.

24 மணி நேரத்தில் க்யூப்ஸ் 9732 எண்ணிக்கையுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த சென்னை மாணவர் கனிஷ்!

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, பாரா ஒலிப்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் ஆகியோரும் கூட தமிழ் மண்ணில் தான் பிறந்தார்கள். இப்படிப்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த மண்ணில் தான் தோன்றியிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து உத்வேகம் அடைவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவை தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக காண விழைகிறோம்.

கொரோனா தொற்று உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட டெவோன் கான்வே!

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள், கேலோ இந்தியா பணிக்கால விளையாட்டுக்கள் மற்றும் கேலோ இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுக்கள் விளையாடவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சி என்று 4 பகுதிகளிலிருந்து நமது சாம்பியன்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…