டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய சந்தர்பால்..! பிராத்வெயிட் - சந்தர்பால் ஜோடி சாதனை
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 336 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸின் பிராத்வெயிட் - சந்தர்பால் தொடக்க ஜோடி சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்துள்ளார் தேஜ்நரைன் சந்தர்பால்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிரைக் பிராத்வெயிட் மற்றும் தேஜ்நரைன் சந்தர்பால் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். 182 ரன்களை குவித்த பிராத்வெயிட் இரட்டை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பிராத்வெயிட் - சந்தர்பால் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 336 ரன்களை குவித்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? மஹேலா ஜெயவர்தனே ஆருடம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசிய தேஜ்நரைன் சந்தர்பால், தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்தார். 207 ரன்களை குவித்து கடைசிவரை சந்தர்பால் ஆட்டமிழக்கவில்லை. 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி டிக்ளேர் செய்தது.
இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 447 ரன்களை குவித்த பிராத்வெயிட் - சந்தர்பால் தொடக்க ஜோடி அபாரமான சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க ஜோடி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதன்மூலம் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்து கொடுத்த தொடக்க ஜோடி என்ற சாதனையை பிராத்வெயிட் - சந்தர்பால் படைத்துள்ளனர்.
IND vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் ஜான்சனின் கேம் சேஞ்சிங் அட்வைஸ்
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கார்டான் க்ரீனிட்ஜ் - டெஸ்மாண்ட் ஹைன்ஸ் 1990ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் விக்கெட்டுக்கு 298 ரன்களை குவித்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த வெஸ்ட் இண்டீஸின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.