உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற குல்தீப் யாதவ்!

டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய குல்தீப் யாதவ் இன்று உத்தரப்பிதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

T20 World Cup-winning Team Player Kuldeep Yadav Meets UP CM Yogi Adityanath at his Residence rsk

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடின. கடைசியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்தன.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அனியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணிக்கு டெல்லியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணி வீரர்கள் அதன் பிறகு மும்பை சென்றனர்.

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் - அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் பற்றி தெரியுமா?

அங்கு திறந்தவெளி பேருந்தில் வான்கடே ஸ்டேடியம் வரையில் வெற்றி அணிவகுப்பு நடத்தினர். இதைத் தொடர்ந்து வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் பேசினர். கடைசியாக டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் வெற்றி ஊர்வலத்திற்கு பிறகு நாடு திரும்பிய குல்தீப் யாதவ் இன்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது சார். மிக்க நன்றி ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.

நவம்பரில் ஐசிசி தலைவருக்கான தேர்தல் – ஜெய் ஷா போட்டியிட்டால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு!

இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்பட, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வரை யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, சட்டமன்றத்திற்கு சென்றனர். மகராஷ்டிரா அரசு சார்பில் ரோகித் சர்மா, ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ரூ.11 கோடியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios