விராட் கோலி மாதிரியான ஒரு வீரரை தனது காலத்தில் பார்த்ததில்லை என்று கூறியுள்ள முன்னாள் வீரர் சையத் கிர்மானி, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டாக விராட் கோலி படுமோசமாக சொதப்பிவருகிறார்.

கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த கோலி, அதன்பின்னர் இரண்டரை ஆண்டுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஐபிஎல்லிலும் கூட சரியாக ஆடவில்லை.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இளம் வீரர்கள் பலர் அருமையாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டி போட்டுவருகின்றனர். உலக கோப்பை நெருங்கும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.

இதையும் படிங்க - இது என்னங்க அநியாயமா இருக்கு.. சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான விதி மாற்றத்தை வலியுறுத்தும் அஷ்வின்

இளம் வீரர்கள் அபாரமாக விளையாடிவரும் நிலையில், கோலி சரியாக ஆடாவிட்டாலும், அவர் கோலி என்பதற்காக அவரை அணியில் வைத்துக்கொண்டு, நல்ல ஃபார்மில் உள்ள திறமையான இளம் வீரர்களை வெளியில் உட்கார வைக்கப்படுகின்றனர். கோலி என்ற அவரது அடையாளத்துக்காக மட்டுமே, ஃபார்மில் இல்லாத கோலியை அணியில் எடுப்பது சரியாக இருக்காது என்று கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் கருத்து கூறியிருந்தனர். அது அணியின் நலனை பாதிக்கும் என்பதால் அப்படி கருத்து கூறியிருந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட, 2 போட்டியிலும் சேர்த்தே 12 ரன் மட்டுமே அடித்திருந்தார் கோலி. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறுவது குறித்த விவாதம் நடந்துவரும் நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், 1983 உலக கோப்பை வின்னிங் அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர் சையத் கிர்மானியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்பட்ட விராட் கோலி..? முடிவுக்கு வரும் டி20 கெரியர்..?

இதுகுறித்து பேசியுள்ள சையத் கிர்மானி, 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவந்தார் கோலி. கோலி மாதிரியான ஒரு வீரரை எனது காலத்தில் நான் பார்த்ததில்லை. இப்போது அவரது கெரியரில் மோசமான காலக்கட்டத்தில் இருக்கிறார். கோலி மாதிரியான உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் இவ்வளவு நீண்டகாலம் மோசமான ஃபார்மில் இருப்பது வருத்தத்திற்குரியதுதான். 

ஆனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கோலியை கண்டிப்பாக எடுக்க வேண்டும். அவர் ரோல் மாடல், ஆக்ரோஷமான வீரர், அணி வீரர்களை உற்சாகமும் உத்வேகமும் படுத்தக்கூடிய அனுபவமான வீரர். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தால் தான் அவர்களிடமிருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்று சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.