Asianet News TamilAsianet News Tamil

இது என்னங்க அநியாயமா இருக்கு.. சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான விதி மாற்றத்தை வலியுறுத்தும் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான விதி மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
 

ravichandran ashwin asks for lbw rule change in international cricket
Author
Chennai, First Published Jul 14, 2022, 5:26 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் பல விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன என்பது பவுலர்களின் ஆதங்கம். அந்தவகையில், அப்படியான ஒரு விதியை பவுலர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் வலியுறுத்தியுள்ளார்.

பவுலர்கள் எந்த பக்கத்தில் இருந்து பந்துவீசப்போகிறார்கள், எந்த கையில் பந்துவீசப்போகிறார்கள் என்பதெல்லாம் முன்பே தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பேட்ஸ்மேன் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் ஆடலாம். நினைத்தபோதெல்லாம் எந்த பக்கம் திரும்பியும் பேட்டிங் ஆடலாம்.

இதையும் படிங்க - ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்பட்ட விராட் கோலி..? முடிவுக்கு வரும் டி20 கெரியர்..?

இந்த காலக்கட்டத்தில் நிறைய பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட் (வலது கை பேட்ஸ்மேன் முழுவதுமாக இடது பக்கம் திரும்பி ஆடுவது அல்லது இடது கை பேட்ஸ்மேன் வலது பக்கம் திரும்பி ஆடுவது) ஷாட் எல்லாம் ஆடுகின்றனர். பேட்ஸ்மேன்கள் எந்த பக்கம் வேண்டுமானால் திரும்பி அவர்களின் தேவைக்கேற்ப ஆட முடிகிறது.

ஆனால் அப்படி ஆடும்போது எல்பிடபிள்யூ ஆனால் கூட, பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆயிற்று, என்று கூறி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டிலிருந்து தப்பிவிடுகின்றனர். அது பேட்ஸ்மேன் பிரச்னை இல்லை; விதி அப்படி இருக்கிறது. அதனால் பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட் ஆடமுயன்று  அவுட்டானால் கூட தப்பித்துவிடுகின்றனர்.

இதையும் படிங்க - 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆடமுடியாது..? இதுதான் காரணம்

இதுகுறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், பேட்ஸ்மேன்கள் திரும்பி ஸ்விட்ச் ஹிட் ஆடும்போது எல்பிடபிள்யூ ஆனால், லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகிறது என்ற காரணமெல்லாம் இல்லாமல் பந்து ஸ்டம்ப்பை தாக்கினாலே எல்பிடபிள்யூ கொடுக்கும் வகையில் விதியை மாற்ற வேண்டும் என்று அஷ்வின் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios