Asianet News TamilAsianet News Tamil

2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆடமுடியாது..? இதுதான் காரணம்

2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடுகிறது.
 

south africa direct odi world cup qualification in doubt after withdraw from australia odi series
Author
Chennai, First Published Jul 13, 2022, 4:33 PM IST

2023ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. ஐசிசி ஒருநாள் சூப்பர் லீக் பட்டியலில் டாப் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும்.

அதற்கு பின்னால் உள்ள  அணிகள், ஒன்றுடன் ஒன்று மோதி வெற்றி பெற்றால் தான் பங்கேற்க முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் நிரந்தர அணிகளில் ஒன்றான மற்றும் சிறந்த அணியான தென்னாப்பிரிக்கா, ஒருநாள் உலக கோப்பையில் பங்கேற்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்

ஓடிஐ சூப்பர் லீக் பட்டியலில் 11ம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, 2023 ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடவிருந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை ரத்து செய்துள்ளது. 2023 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் புதிய டி20 லீக் தொடர் ஒன்று தொடங்கப்படவுள்ளது. அதற்காக ஆஸ்திரேலிய தொடரை ரத்து செய்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இதையும் படிங்க - ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார் பும்ரா..!

அதனால் அந்த தொடரை தென்னாப்பிரிக்கா 0-3 என இழந்ததாக கருதப்படும். எனவே இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி நேரடியாக பங்கேற்க முடியாது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios