சூர்யகுமார் யாதவ் இதுக்கு சரிப்பட மாட்டார், எதுக்கு தான் சரிப்படுவார்? பலே ஐடியா கொடுத்த தினேஷ் கார்த்திக்!

சூர்யகுமார் யாதவ் நம்பர் 4ல் இறங்கி விளையாடுவதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
 

Suryakumar Yadav should be placed at Number 6 says Dinesh Karthik

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால், 4ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆம் நாள் ஆட்டத்திற்கு அவர் களமிறங்க வரவில்லை. இதையடுத்து, முதுகு வலி காரணமாக அவர் எஞ்சிய நாட்களில் விளையாட வரவில்லை. டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகினார்.

மளமளவென்று சரிந்த விக்கெட் - இன்னிங்ஸ் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!

இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். முதல் முறையாக டக் அவுட்டில் வெளியேறினார். இதே போட்டி நேற்று நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் அவர் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்; சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர். அவரை அணியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக அவர் களமிறங்கும் இடத்தை வேண்டுமென்றால் மாற்றலாம். ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாட விருப்பம் கொண்டவர். ஆதலால், அவருக்கு 4ஆவது இடம் கொடுத்துவிட்டு, சூர்யகுமார் யாதவ்வை 6ஆவது இடத்தில் களமிறக்க வேண்டும். அவர் கடைசி 18 முதல் 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடுவார். ஆகையால் அதற்கேற்ப அவரை பயன்படுத்திக் கொண்டால் அணிக்கு நல்லது என்று அவர் கூறியுள்ளார். 

கொரோனா இல்லைனாலும் ஐபிஎல் ரூல்ஸாக இதை பாலோ பண்ண வேண்டும் - ஐபிஎல் மருத்துவ குழு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios