கொரோனா இல்லைனாலும் ஐபிஎல் ரூல்ஸாக இதை பாலோ பண்ண வேண்டும் - ஐபிஎல் மருத்துவ குழு!
கொரோனா இல்லை என்றாலும், ஒவ்வொரு வீரர்களும், தங்களை தாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஐபிஎல் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழகத்தை மட்டுமின்றி உலகத்தையே அச்சுறுத்திய பெருந்தொற்று கொரோனா. இதன் பாதிப்பு காரணமாக எத்தனையே பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மரணத்தில் விளிம்பு வரை சென்று மீண்டும் திரும்பி வந்த சம்பவங்கள் உண்டு. கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. லாக்டவுன் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதையெல்லாம் இன்று நினைத்தால் கூட வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் இருந்துச்சா என்று நினைக்கத் தோன்றுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு காரணமாக வீரர்கள் ஒவ்வொருவரும் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதோடு, இதில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றனர். இவ்வளவு ஏன் போட்டியே தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நடக்கவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிகிறது. இதில், மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஹர்திக் பாண்டியாவை பார்த்து ‘போடா டேய்’னு சொன்ன ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் வீடியோ!
வரும் 31 ஆம் தேதி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கு முன்னதாக இருந்த பயோ பப்பிள் பாதுகாப்பு முறை இந்த ஆண்டு இருக்காது. மாறாக, அதற்குப் பதிலாக வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐபிஎல் மருத்துவ குழு கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை கொரோனா பாசிட்டிவ் என்று தெரிய வந்தால் அவர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும். மேலும், அவர்கள் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன் பிறகு மறுபடியும் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், 2 முறை நெகட்டிவ் சான்றிதழ் வழங்க வேண்டும்.
"ஐந்தாவது நாளிலிருந்து, அவர்கள் RT-PCRக்கு உட்படுத்தப்படலாம், அவர்கள் 24 மணிநேரத்திற்கு எந்த மருந்தும் இல்லாமல் அறிகுறியற்றவர்களாக இருக்க வேண்டும். முதல் முடிவு நெகட்டிவ் என்று இருந்தால் 2வது பரிசோதனையை 24 மணிநேர இடைவெளியில் செய்ய வேண்டும். 24 மணிநேர இடைவெளியில் இரண்டு எதிர்மறையான RT-PCR சோதனைகளைப் பெற்ற பிறகு, அதாவது ஐந்து நாள் மற்றும் ஆறாவது நாள், அவர்கள் மீண்டும் குழுவில் சேர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.