ஹர்திக் பாண்டியாவை பார்த்து ‘போடா டேய்’னு சொன்ன ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் வீடியோ!

ஹர்திக் பாண்டியாவைப் பார்த்து ‘போடா டே’னு சொன்ன ரவீந்திர ஜடேஜாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Ravindra Jadeja calls Hardik Pandya Poda Dei IPL Promo Video Goes viral

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வரும் 22 ஆம் தேதியுடன் ஒரு நாள் தொடர் முடிந்து வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் ஆரம்பமாகிறது. 16ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கான புரோமோ வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

2 போட்டியிலும் கோல்டன் டக்: வாய்ப்பை கோட்டை விட்ட சூர்யகுமார் யாதவ்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

அதில், கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தாங்கள் முதல் முறையே கோப்பையை வென்றோம் என கூறுகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரவீந்திர ஜடேஜா ‘நாங்கள் நான்கு முறை கோப்பையை வென்றோம்’ என்று கூறுகிறார். நாங்கள் தான் கெத்து என ஹர்திக் பாண்டியா சொல்ல, ஜடேஜா விசில் அடிக்க சென்னை ரசிகர்களுக்கு பின்னால் தோனியின் படம் வந்து நிற்கிறது. உடனே குஜராத்தி மொழியில் ஹர்திக் பாண்டியா கொண்டு வா என்று குஜராத்தி மொழியில் சொல்ல, ‘போடா டேய்’ என ஜடேஜா சொல்வதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது.

6 வருடங்களுக்கு பிறகு டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் வரும் மே 28 ஆம் தேதி முடிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், நியூசிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான கைல் ஜேமிசன் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். ரூ.1 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. தற்போது இவருக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசாண்டா மகாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பறவை போல பறந்த ஸ்டீவ் ஸ்மித் - ஹர்திக் பாண்டியாவை கெட்ச் போட்டு தூக்கிய ஆஸ்திரேலியா!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios