Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ: இது விராட் கோலி தவறா, சூர்யகுமார் யாதவ் தவறா? – 2 ரன்களில் ரன் அவுட்டாகி பரிதாபமாக சென்ற SKY!

நியூசிலாந்துக்கு எதிரான 21ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அணியில் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற சம்பவம் நடந்துள்ளது.

Suryakumar Yadav Run out just for 2 Runs against New Zealand in his First World Cup 2023 at Dharamsala rsk
Author
First Published Oct 22, 2023, 9:43 PM IST | Last Updated Oct 22, 2023, 9:43 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 21ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலாவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. இதில், டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பவுலர்களைப் பொறுத்த வரையில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

புகை மண்டலமாக காட்சி தந்த தரம்சாலா - பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறிய இந்திய வீரர்கள்!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்க கொடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

India vs New Zealand: ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை!

மேலும், இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் 50 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி 48 சிக்ஸர்கள் அடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 56 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதே போன்று 2015 ஆம் ஆண்டுகளில் ஏபி டிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

IND vs NZ: முகமது ஷமிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

மேலும், உலகக் கோப்பையில் மட்டும் ரோகித் சர்மா 40 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் 49 அடித்து கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். டிவிலியர்ஸ் 37 சிக்ஸர்களும், ரிக்கி பாண்டிங் 31 சிக்ஸர்களும், பிரெண்டன் மேக்கல்லம் 29 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

 

 

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணியில் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ், 2 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். டிரெண்ட் போல்ட் வீசிய 34 ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தார். அதில் 5 ஆவது பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் பந்தை ஆஃப் ஸைடு திசையில் அடிக்க அங்கு பீல்டிங்கில் நின்றிருந்த மிட்செல் சாண்ட்னர் பந்தை தடுத்து போல்ட்டிடம் கொடுக்கவே அவர் டாம் லாதமிட வீச அவர் கச்சிதமாக ரன் அவுட் செய்தார். விராட் கோலி நினைத்திருந்தால் ஓடியிருக்கலாம். ஆனால், அவர் கடைசி வரை பந்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் சூர்யகுமார் யாதவ் பந்தை அடித்த உடனே கிரீஸை விட்டு ஓடி வந்துவிட்டார். ஆனால், அதன் பிறகு அவரால் திரும்ப செல்ல முடியவில்லை.

150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக வேண்டிய போட்டி – தனி ஒருவனாக காப்பாற்றிய மிட்செல் – நியூசி.,273 ரன்கள் குவிப்பு!

இறுதியாக ரன் அவுட்டில் வெளியேறினார். இது அவரது முதல் உலகக் கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியா திரும்ப வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால், சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs NZ: கையில விழுந்த கேட்சை தட்டிவிட்டு பவுண்டரி கொடுத்த பும்ரா; சொதப்பிய இந்திய அணியின் பீல்டிங்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios