குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் டேரில் மிட்செல் கொடுத்த கேட்சை பும்ரா நழுவ விட்டு பந்தை பவுண்டரிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 21ஆவது போட்டி தற்போது தரம்சாலாவில் நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா நழுவ விட்டார்.
IND vs NZ: ஜடேஜா விட்ட கேட்சால் வந்த விபரீதம் – ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து அசத்தல்!
அதன் பிறகு அதிரடியாக விளையாடி இந்த சீசனில் 3ஆவது அரைசதம் அடித்தார். இதே போன்று குல்தீப் யாதவ் வீசிய 33ஆவது ஓவரில் டேரில் மிட்செல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜஸ்ப்ரித் பும்ரா கோட்டைவிட்டதோடு மட்டுமின்றி பந்தை பவுண்டரிக்கும் தட்டிவிட்டுள்ளார். அப்போது டேரில் மிட்செல் 74 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் இருவரும் கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட நிலையில் தற்போது பும்ராவும் கேட்ச்சை கோட்டைவிட்டுள்ளார். இதே போன்று ஷமி ஓவரில் ரச்சின் ரவீந்திரா காலில் பட்டு பந்து கீப்பர் திசையில் சென்றது. அப்போது பீல்டிங்கில் இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா பந்து பின்னாடியே ஓடிச் சென்றார். ஆனாலும் பிடிக்கவில்லை. எளிதில் தடுக்க வேண்டிய பந்தாக இருந்தாலும் பந்து பின்னாடியே ஓடியதை பீல்டிங் பயிற்சியாளர் திலீப் நேரில் பார்த்துள்ளார். விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில் முதற்கொண்டு ஒவ்வொருவரு விமர்சிக்கத் தொடங்கினர். எப்படியும் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் பீல்டிங் குறித்து திலீப் விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


