150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக வேண்டிய போட்டி – தனி ஒருவனாக காப்பாற்றிய மிட்செல் – நியூசி.,273 ரன்கள் குவிப்பு!
இந்தியாவிற்கு எதிரான 21ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்துள்ளது.
தரம்சாலா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 21ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், இந்தியா டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில் டெவான் கான்வே மற்றும் வில் யங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்தப் போட்டியில் ரன்கள் அடிக்க திணறிய கான்வே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வில் யங் 17 ரன்களில் முகமது ஷமி பந்தில் கிளீன் போல்டானார். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர். முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்தது.
டிராப் கேட்ச் – ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள்:
ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி ஓவரில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா கோட்டைவிட்டார். இதன் காரணமாக இந்தப் போட்டியின் மூலமாக 3ஆவது அரைசதம் அடித்தார். இறுதியாக, ரச்சின் ரவீந்திரா 87 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 75 ரன்கள் குவித்து ஷமி பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 159 ரன்கள் குவித்தது. அதன் பிறகு டாம் லாதம் களமிறங்கினார்.
IND vs NZ: ஜடேஜா விட்ட கேட்சால் வந்த விபரீதம் – ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து அசத்தல்!
டேரில் மிட்செல் – டிராப் கேட்ச் 59 ரன்கள்
இந்தப் போட்டியில் டேரில் மிட்செல் அரைசதம் அடித்த போது, ரவீந்திர ஜடேஜா ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டைவிட்டார். அப்போது டேரில் மிட்செல் 59 ரன்கள் எடுத்திருந்தார். லாதம் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் களமிறங்கினார்.
மிட்செல் சதம்:
தொடர்ந்து விளையாடிய மிட்செல் இந்த உலகக் கோப்பையில் சதம் விளாசினார். இதன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 5 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். அவர் 100 பந்துகளில் சதம் விளாசினார். அதன் பிறகு பிலிப்ஸ் 23 பந்துகளில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். ஒரு புறம் மிட்செல் அதிரடியாக விளையாடவே ஒரு புறம் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. அவர் குறி வைத்தது எல்லாமே குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா பந்துகளைத் தான். குல்தீப் யாதவ் ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள் உள்பட 16 ரன்கள் எடுக்கப்பட்டது.
ஷமி ஹாட்ரிக் வாய்ப்பு மிஸ்:
பிலிப்ஸைத் தொடர்ந்து மார்க் சேப்மேன் களமிறங்கினார். அவரும் 6 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த மிட்ல்செல் சாண்ட்னர் களமிறங்கி 1 ரன்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேட் ஹென்றி ரன் ஏதும் எடுக்காமல் ஷமியின் அடுத்த பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து லாக்கி ஃபெர்குசன் களமிறங்கினார். இதையடுத்து ஷமி தனக்கு கிடைத்த ஹாட்ரிக் வாய்ப்பை கோட்டைவிட்டார்.
ஷமி 5 விக்கெட்:
கடைசியாக ஃபெர்குசனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து டேரில் மிட்செல் பேட்டிங் செய்தார். கடைசி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் மிட்செல் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 127 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 130 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக ஷமி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியில் கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒருமுறை உலகக் கோப்பையில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தனர். இதுவரையில் இந்திய அணி விளையாடிய 4 போட்டியிலும் ஷமி இடம் பெறவில்லை. வேறுவழியின்றி இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷமி இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இறுதியாக கடைசி பந்தில் லாக்கி ஃபெர்குசன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்துள்ளது.
- CWC 2023
- Cricket World Cup 2023
- Daryl Mitchell
- Dharamsala
- Hardik Pandya
- Hardik Pandya Injured
- ICC Cricket World Cup 2023
- IND vs NZ World Cup Cricket
- India vs New Zealand
- India vs New Zealand 21th Match
- India vs New Zealand Live Score
- India vs New Zealand Watch Live Streaming
- India vs New Zealand World Cup
- Indian Cricket Team
- Ishan Kishan
- Jasprit Bumrah
- KL Rahul
- Kuldeep Yadav
- Mohammed Shami
- Points Table
- Rachin Ravindra
- Ravindra Jadeja
- Rohit Sharma
- Shardul Thakur
- Suryakumar Yadav
- Suryakumar Yadav Wrist Injured
- Team India
- Watch IND vs NZ Live
- World Cup 2023
- World Cup Cricket Live Scores
- World Cup IND vs NZ Venue