IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்
30 வயதுக்கு மேல் 3 ஃபார்மட்டிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதன் விளைவாக, இந்திய டி20 அணியில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
தனக்கு இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி இந்திய டி20 அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை என்றால் மட்டுமே சூர்யகுமார் யாதவுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கிறது.
IND vs AUS: லன்ச்சுக்கு பின் மாஸ் காட்டிய ஜடேஜா.. லபுஷேன், ஸ்மித் ஆகிய பெரிய தலைகளை வீழ்த்தி அசத்தல்
அந்தவகையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாததால் சூர்யகுமார் யாதவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இன்று நாக்பூரில் தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுகமானார்கள்.
முழு விவசாயியாகவே மாறிய தோனி.. தன் விளைநிலத்தை டிராக்டரில் தானே உழுத தோனி..! வைரல் வீடியோ
டெஸ்ட்டில் அறிமுகமானதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அதாவது, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டிலும் 30 வயதுக்கு மேல் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்தார்.