Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS: லன்ச்சுக்கு பின் மாஸ் காட்டிய ஜடேஜா.. லபுஷேன், ஸ்மித் ஆகிய பெரிய தலைகளை வீழ்த்தி அசத்தல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா.
 

ravindra jadeja took 3 important wickets after lunch on first day in first test against australia
Author
First Published Feb 9, 2023, 1:52 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமானார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

முழு விவசாயியாகவே மாறிய தோனி.. தன் விளைநிலத்தை டிராக்டரில் தானே உழுத தோனி..! வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, ஸ்காட் போலந்த்.

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இன்னிங்ஸின் 2வது ஓவரில் உஸ்மான் கவாஜாவை ஒரு ரன்னுக்கு எல்பிடபிள்யூ செய்து அனுப்பினார் முகமது சிராஜ். அதற்கடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னரின் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்து ஒரு ரன்னில் வெளியேற்றினார் ஷமி.

2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி இழந்த நிலையில், அதன்பின்னர் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் ஸ்மித் - லபுஷேன் ஜோடி ஆடியது. உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் அடித்திருந்தது.

மதிய உணவு இடைவேளை முடிந்து, அடுத்த 4வது ஓவரில் மார்னஸ் லபுஷேனை அபாரமான சுழலின் மூலம் ஜடேஜா வீழ்த்தினார். பந்து நன்றாக சுழன்று திரும்ப, அதை அடிக்க ஃப்ரண்ட்ஃபூட்டில் முன்பாக நகர்ந்துவந்த லபுஷேன், க்ரீஸுக்கு திரும்புவதற்குள் கேஎஸ் பரத் அவரை ஸ்டம்பிங் செய்தார். அதற்கடுத்த பந்திலேயே மேட் ரென்ஷாவை வீழ்த்தினார் ஜடேஜா. 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார் ஸ்மித்.

ஆசிய கோப்பை விவகாரத்திற்கு தீர்வு சொன்ன அப்துல் ரசாக்! இவரா இப்படி பேசுறது? வியப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்

நன்றாக ஆடி அக்ஸர் படேலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கி 37 ரன்களுக்கு வீழ்த்தினார் ஜடேஜா. மதிய உணவு இடைவேளைக்கு பின் ஜடேஜா ஆஸ்திரேலியாவின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு பலம் சேர்த்தார். இதையடுத்து ஹேண்ட்ஸ்கோம்ப்பும் அலெக்ஸ் கேரியும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios