நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்களை குவித்து, 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை நெல்லை அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸும் லைகா கோவை கிங்ஸும் ஆடிவருகின்றன.

சேலத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. லைகா அணியின் தொடக்க வீரர்கள் சுரேஷ் குமார் - ஸ்ரீதர் ராஜு ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்

முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் குமார் அரைசதம் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய சாய் சுதர்ஷன் 18 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - இந்தியாவிற்கு மேட்ச்சை ஜெயித்து கொடுத்த சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங்! ஒரே டைவில் ஹீரோவான சாம்சன்.. வீடியோ

அதிரடியாக ஆடிய சுரேஷ் குமார் 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 177 ரன்களை குவித்த லைகா கோவை கிங்ஸ் அணி, 178 ரன்கள் என்ற இலக்கை நெல்லை ராயல் கிங்ஸுக்கு நிர்ணயிக்க, அதை விரட்டிவருகிறது நெல்லை அணி.