IPL 2023: ஜெயிச்சே தீரணும்; SRH அணியில் அதிரடி மாற்றங்கள்! PBKS-ல் வெளிநாட்டு வீரர் மாற்றம்.. டாஸ் ரிப்போர்ட்
ஐபிஎல் 16வது சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் நடந்த போட்டியில் கேகேஆரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி 3வது வெற்றியை பெற்றது. இரவு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கு முன் ஆடிய 2 போட்டிகளிலும் தோற்ற சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும், முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் களமிறங்கியுள்ளன.
இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ள இந்த போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் காயம்.. முக்கியமான அப்டேட்..! பீதியில் சிஎஸ்கே
இந்த சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் ஆர்டரை மாற்றிவிட்டது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு, ஹாரி ப்ரூக்கை மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறக்குகிறது. அபிஷேக்கை நீக்கியதால் மயன்க் மார்கண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். க்ளென் ஃபிலிப்ஸ் மற்றும் அடில் ரஷீத் நீக்கப்பட்டு முறையே ஹென்ரிச் கிளாசன் மற்றும் மார்கோ யான்சென் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பானுகா ராஜபக்சா நீக்கப்பட்டு மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், நடராஜன், மயன்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, மேத்யூ ஷார்ட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், சாம் கரன், ஹர்ப்ரீத் பிரார், மோஹித் ரதீ, ராகுல் சாஹர், நேதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.