IPL 2023: பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் காயம்.. முக்கியமான அப்டேட்..! பீதியில் சிஎஸ்கே
ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே அணி நன்றாக ஆடி வெற்றிகளை பெற்றுவரும் நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் காயங்கள் குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அப்டேட் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன.
முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்ற சிஎஸ்கே அணி, 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸையும், நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக ட்வைன் பிரிட்டோரியஸ் ஆடினார்.
IPL 2023: வெற்றியே பெறாத SRH & தோல்வியே அடையாத PBKS பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை வீசிய தீபக் சாஹர், அந்த ஓவரின் 5வது பந்தை வீசியபோது காயமடைந்து சென்றார். அதன்பின்னர் பந்துவீசவில்லை. சிஎஸ்கே அணி வீரர் முகேஷ் சௌத்ரி இந்த சீசனிலிருந்து விலகினார். ஏற்கனவே ஃபாஸ்ட் பவுலிங் பிரச்னையாக இருக்கும் நிலையில், தீபக் சாஹரின் காயம் சிஎஸ்கேவிற்கு கவலையளித்துள்ளது.
IPL 2023: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி
அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில், ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் காயம் குறித்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம், சென்னைக்கு சென்றபின் தீபக் சாஹர் காயத்தின் ஆழத்தை அறிய ஸ்கேன் செய்யப்படும். ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரின் காயங்களையும் சிஎஸ்கே மருத்துவக்குழு கண்காணித்து, அவர்கள் காயத்திலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகளை செய்துவருகிறது என்று தெரிவித்துள்ளது.