Asianet News TamilAsianet News Tamil

IPL Auction 2023: மயன்க் அகர்வாலுக்காக SRH உடன் போட்டி போட்டு தோற்ற CSK! சீனியர் வீரரை சிறிய தொகைக்கு எடுத்தது

ஐபிஎல் ஏலத்தில் மயன்க் அகர்வாலை எடுக்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டிய நிலையில், கடைசிவரை விட்டுக்கொடுக்காத சன்ரைசர்ஸ் அணி, மயன்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
 

sunrisers hyderabad gets mayank agarwal and csk bids ajinkya rahane in ipl mini auction 2023
Author
First Published Dec 23, 2022, 3:19 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 10 அணிகளில் உள்ள 87 இடங்களை நிரப்புவதற்கான இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம்விடப்படுகின்றனர்.

முதல் வீரராக ஏலம் விடப்பட்ட கேன் வில்லியம்சன் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டாததால் ரூ.2 கோடி என்ற அவரது அடிப்படை விலைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்தது. இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக்கை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையாக போட்டி போட்டன. கடைசியில் ரூ.13.25 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து சன்ரைசர்ஸ் அணி எடுத்தது.

IPL 2023 Auction: ஹாரி ப்ரூக்கிற்காக அடித்துக்கொண்ட SRH - RR.! பெரிய தொகைக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்

இந்தியாவை சேர்ந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மயன்க் அகர்வாலை எடுக்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டியது. ஆனால் பெரிய தொகையை கையில் வைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவுடன் கடுமையாக போட்டி போட்டது. இரு அணிகளும் மயன்க் அகர்வாலுக்காக போட்டி போட, ரூ.8 கோடியை கடந்ததும் சிஎஸ்கே அணி பின் வாங்கியது. கடைசியில் ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்தது.

IPL Mini Auction 2023: கேன் வில்லியம்சன் மீது ஆர்வம் காட்டாத அணிகள்..! அடிப்படை தொகைக்கு விலைபோன அதிர்ச்சி

இதையடுத்து ரூ.50 லட்சத்தை அடிப்படை விலையாக கொண்ட சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானேவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கே வாங்கியது சிஎஸ்கே.
 

Follow Us:
Download App:
  • android
  • ios