Asianet News TamilAsianet News Tamil

ஒரு 50 கூட இல்ல, ஓவர் நைட்டுல ஹீரோவான அப்துல் சமாத் - கொண்டாடி தள்ளிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து கொடுத்து ஓவர் நைட்டுல ஹீரோவான அப்துல் சமாத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
 

Sunrisers Hyderabad Celebrate Abdul Samad Winning Performance in No ball against Rajasthan Royals
Author
First Published May 8, 2023, 10:42 AM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலாஅ 52ஆவது ஐபிஎல் போட்டி நேற்று ஜெய்பூரில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது. இதில், ஜோஸ் பட்லர் 95 ரன்னும், சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (55 ரன்கள்) நல்ல தொடக்கம் கொடுத்தார். பற்றாக்குறைக்கு ராகுல் திரிபாதி 47 ரன்கள் அடித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரேயொரு நோபால் ஆட்டத்தையே தலைகீழே மாற்றிடுச்சு - வருத்தமாக பேசிய சஞ்சு சாம்சன்!

கிளென் பிலிப்ஸ் 7 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்பட 25 ரன்கள் அடித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. ஒருவழியாக ஜெயிக்க போகிறோம் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசினார்.

சந்தீப் சர்மா 19.1 - அப்துல் சமாத் 2 ரன்கள் எடுத்தார்.

19.2ஆவது பந்து - அப்துல் சமாத் சிக்ஸர் அடித்தார்.

19.3ஆவது பந்து - 2 ரன்கள் எடுக்கப்பட்டது.

19.4ஆவது பந்து - ஒரேயொரு ரன் மட்டும் அப்துல் சமாத் எடுத்தார்.

19.5ஆவது பந்து - மார்கோ யான்சன் ஒரு ரன் எடுத்துக் கொடுத்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸர் அடிக்க முயற்சித்து அப்துல் சமாத் கேட்சானார். ஆனால், எதிர்பாராத விதமாக அது நோபாலாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி பந்தில் அப்துல் சமாத் சிக்ஸர் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

சஹா பேட்டிங்கை பார்த்து வியந்த விராட் கோலி - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இதுவரையில் 31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அப்துல் சமாத் மொத்தமாக 354 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரையில் ஒரு முறை கூட அவர் அரைசதம் அடித்தது இல்லை. அதிகபட்சமாக இந்த சீசனில் 32 ரன்களை பதிவு செய்துள்ளார். இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் மட்டுமே எடுத்துக் கொடுத்துள்ளார். கடைசி பந்தில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த அப்துல் சமாத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மீம்ஸ் உருவாக்கி அவரை கொண்டாடி வருகின்றனர். பாகுபலி பிரபாஸ் ரேஞ்சுக்கு வைத்து பாராட்டி வருகின்றனர்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி - சுழற்பந்தை சமாளிக்க 3ஆவதாக களமிறங்கினேன் - ரோகித் சர்மா விளக்கம்!

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios