ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உடன் பலப்பரீட்சை: ஜெயிச்சா இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் நடக்கிறது. இதில் இந்தியா அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. அடுத்து 11ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அடுத்து 19 ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அக்டோபர் 22ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
குழந்தைகளின் கல்விக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்த புவனேஷ்வர் குமார்!
இப்படி தொடர்ந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியை முன்கூட்டியே இந்தியா தனது சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளும் நிலையில், இந்தப் போட்டிகளில் எல்லாம் வெற்றி பெறும் பட்சத்தில் கடைசியாக நடக்கும் போட்டிகளில் இந்திய அணிக்கு எந்த அழுத்தமும் ஏற்படாது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்ஜாய்மெண்ட் தான் – இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் கன்ஃபார்ம்!
இந்த நிலையில், இந்தியாவிற்கு தான் இறுதிப் போட்டியில் வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து கூறியிருப்பதாவது: உலகக் கோப்பை அட்டவணைப்படி இந்தியா முன்கூட்டியே பலம் வாய்ந்த் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில் கடைசி போட்டிகளில் எல்லாம் சிறிய அணிகளை எளிதில் வென்று விடலாம்.
முன்கூட்டியே பலம் வாய்ந்த் அணிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் எந்த அழுத்தமும் இல்லாமல் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும். இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.