நா ரெடி பாடலுக்கு... அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் மாஸ் ஆக நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலுக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு இந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் உருவாவதற்கு அவரின் நடனமும் ஒரு காரணம் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் விஜய்யை போல் நடனத்தில் அதகளம் செய்யும் நடிகர்கள் மிகவும் கம்மி தான். தற்போது நடிகர் விஜய்க்கு வயது 50-ஐ நெருங்கி விட்டாலும், இன்றளவும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நடனமாடி அசத்தி வருகிறார் விஜய்.
அந்த வகையில், தற்போது லியோ படத்திற்காக அவர் பாடியுள்ள நான் ரெடி பாடலுக்கு சுமார் 2 ஆயிரம் நடனக் கலைஞர்களுடன் நடனமாடியும் அசத்தி இருக்கிறார் விஜய். நான் ரெடி பாடல் கடந்த ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. வெளியானது முதல் சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது இப்பாடல். இதில் நடிகர் விஜய் ஆடியுள்ள ஹூக் ஸ்டெப் ஒன்றும் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... மாரி காட்டுல மழை தான்... மாமன்னன் இயக்குனருக்கு சொகுசு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி
காலை தூக்கிக் கொண்டு விஜய் ஆடியுள்ள அந்த ஹூக் ஸ்டெப் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆக்கிரமித்து உள்ளன. விஜய் ஆடிய அந்த ஹூக் ஸ்டெப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் பலரும் நடனமாடி வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாவில் டிரெண்டாகி உள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை, ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் ஐயர் தான். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவருக்கு நன்கு தமிழ் தெரியும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், தற்போது நடிகர் விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அவர் அச்சு அசல் விஜய்யை போல் நடனமாடுவதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மீண்டும் காஷ்மீரில் லியோ ஷூட்டிங்... மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆன தளபதி விஜய்! லோகேஷின் பிளான் என்ன?