மாரி காட்டுல மழை தான்... மாமன்னன் இயக்குனருக்கு சொகுசு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி
மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் திளைத்துப் போன உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றை பரிசளித்து உள்ளாராம்.
maamannan
கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால், ரவீனா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
maamannan
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதையும் படியுங்கள்... மீண்டும் காஷ்மீரில் லியோ ஷூட்டிங்... மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆன தளபதி விஜய்! லோகேஷின் பிளான் என்ன?
maamannan
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் ஆகியோர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுதவிர இயக்குனர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின். அதன்படி மாமன்னன் படத்தை தன் வாழ்வில் மறக்கமுடியாத படமாக அமைத்து கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளாராம் உதயநிதி.
Maamannan
அதன்படி மினி கூப்பர் என்கிற சொகுசு காரை தான் மாரி செல்வராஜுக்கு பரிசாக வழங்கி இருக்கிறாராம் உதயநிதி. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசளித்துள்ள இந்த சொகுசு காரின் விலை ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மாமன்னன் தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் ஹீரோ தனபால்.... அப்போ அந்த சாதி வெறி பிடித்த வில்லன் எடப்பாடியா? பகீர் கிளப்பிய உதயநிதியின் டுவிட்