மீண்டும் காஷ்மீரில் லியோ ஷூட்டிங்... மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆன தளபதி விஜய்! லோகேஷின் பிளான் என்ன?
விஜய் நடித்து வரும் லியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழு மீண்டும் காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leo
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக லியோ என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் கவுதம் மேனன், மிஷ்கின், வையாபுரி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
Leo
லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இதையடுத்து அம்மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானத்தில் சென்றனர். அங்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் தங்கி லியோ படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த படக்குழு, மார்ச் மாத இறுதியில் மீண்டும் சென்னை திரும்பியது. இதையடுத்து சென்னையில் அப்படத்தின் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் ஹீரோ தனபால்.... அப்போ அந்த சாதி வெறி பிடித்த வில்லன் எடப்பாடியா? பகீர் கிளப்பிய உதயநிதியின் டுவிட்
Leo
லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், தற்போது லியோ படக்குழு மீண்டும் காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆகிப் போய் உள்ளனர். இந்த முறை படத்தின் பேட்ச் ஒர்க்கிற்காக காஷ்மீர் செல்ல உள்ளதாம் படக்குழு.
அங்கு விஜய் செல்லவில்லையாம், இதர நடிகர், நடிகைகளுடன் சென்று சில நாட்கள் மட்டும் பேட்ச் ஒர்க்கை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். இந்த பேட்ச் ஒர்க் முடிந்ததும் லியோ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையும் என கூறப்படுகிறது. இதையடுத்து படத்தின் பின்னணி பணிகளை விறுவிறுவென முடித்து படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரொம்ப கன்றாவியா இருக்கு! மேலாடை இருக்கு ஆனா இல்லா.. அரைநிர்வான கோலத்தில் உர்ஃபி ஜவாத்.. குவியும் கண்டனம்!