குழந்தைகளின் கல்விக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்த புவனேஷ்வர் குமார்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், குழந்தைகளின் கல்விக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்து வளர்ந்த புவனேஷ்வர் குமார், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளும், 552 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 121 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளும், 552 ரன்களும் சேர்த்துள்ளார். இதே போன்று 77 டி20 போட்டிகளில் பங்கேற்று 61 ரன்கள், 84 விக்கெட்டுகள் சேர்த்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்ஜாய்மெண்ட் தான் – இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் கன்ஃபார்ம்!
கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினார். அதே போன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடினார். இந்த ஆண்டில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று 14 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த நிலையில், குஜராத்தில் உள்ள குருகுல ஆசிரத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக ரூ.10 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.