ரூம் கிடைக்காமல் 3 மணி நேரமாக காத்திருந்த இலங்கை வீரர்கள்!
ஜிம்பாப்வே சென்றுள்ள இலங்கை அணி புலவாயோவில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்கு ரூம் கிடைக்காமல் ரூமிற்கு வெளியில் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக காத்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்றுக்கு இலங்கை அணி, ஜிம்பாப்விற்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு புலவாயோவில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்கு ரூம் கிடைக்காமல் ரூமிற்கு வெளியிலும், பால்கனியிலும் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக காத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: நேற்று நண்பகல் இலங்கை அணி புலவாயோவில் உள்ள ஹோட்டலுக்கு சென்றது. அப்போது, இலங்கை அணி செக் இன் செய்யும் போது, மற்றொரு தேசிய கிரிக்கெட் அணி செக் இன் செய்யும் பணி நடந்தது. இதனால், இலங்கை வீரர்களில் சிலர் செக் இன் செய்வதற்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்த பின்னர், குறுகிய காலத்திற்குள் பிரச்சனை சரி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
TNPL 2023, SS vs CSG: டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் டீம் பேட்டிங்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது. அதனால்தான் இலங்கை அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சென்றது. இதில், ஜிம்பாப்வே, இலங்கை, நேபாளம், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமீரகம், அயர்லாந்து, ஓமன், நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து என்று மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
ஐபிஎல்லில் ஜெயிப்பது தான் ரொம்பவே கஷ்டம் – சவுரவ் கங்குலி!
வரும் 18 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி வரும் ஜூலை 09 ஆம் தேதி முடிவடைகிறது. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPL 2023 இன்று நடக்கும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் பலப்பரீட்சை!