ஐபிஎல்லில் ஜெயிப்பது தான் ரொம்பவே கஷ்டம் – சவுரவ் கங்குலி!
ஐபிஎல் தொடரில் வெல்வது ரொம்பவே கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. கடந்த10 ஆண்டுகளில் 9 முறை ஐசிசி தொடர்களில் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.
TNPL 2023 இன்று நடக்கும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் பலப்பரீட்சை!
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது: தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப் பின் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியாவின் முதல் டெஸ்ட் சீரிஸ் அறிவிப்பு!
அதற்கு முக்கிய காரணமாக இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 5 முறை கோப்பைகளை கைப்பற்றியிருந்தார். விராட் கோலி கேப்டனாக இருந்த போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பைகளை இழந்தோம். ஆதலால், ரோகித் சர்மா தான் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதி அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே: பந்து மீது மோதிரம் வைத்து நிச்சயதார்த்தம்!
உலகக் கோப்பை தொடரில் வெல்வதைக் காட்டிலும், ஐபிஎல் தொடரில் டிராபி வெல்வது தான் கடினம். ஏனென்றால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4 அல்லது 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டி அல்லது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிட்டும். இதுவே ஐபிஎல் என்றால் முதல் 4 இடங்களில் இடம் பெற வேண்டும். அதன் பிறகு பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெற வேண்டும். இறுதியாக இறுதிப் போட்டிக்கு சென்று அதில் வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியனாக முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது 6ஆவது முறை: அஸ்வினைப் போன்று யாரும் மோசமாக நடத்தப்படவில்லை – சுனில் கவாஸ்கர்!