Asianet News TamilAsianet News Tamil

சுத்தி சுத்தி அடிச்ச பிரதோஷ் ஃபால்; டிஎன்பிஎல் தொடரில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த சேப்பாக்கம்!

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 2ஆவது போட்டியில் முதலில் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 217 ரன்கள் குவித்துள்ளது.

Chepauk Super Gillies Registered second highest score 217 against in Salem Spartans in TNPL History
Author
First Published Jun 13, 2023, 9:23 PM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், டிஎன்பிஎல் 2023 தொடரின் 7ஆவது சீசனின் முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

TNPL 2023, SS vs CSG: டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் டீம் பேட்டிங்!

இதைத் தொடர்ந்து தற்போது டிஎன்பிஎல் தொடரின் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரதோஷ் ஃபால் மற்றும் ஜெகதீசன் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் குவித்தது.

ஐபிஎல்லில் ஜெயிப்பது தான் ரொம்பவே கஷ்டம் – சவுரவ் கங்குலி!

தொடக்க வீரராக களமிறங்கிய பிரதோஷ் ஃபால் அதிரடியாக ஆடிய 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 88 ரன்கள் எடுத்து, 12 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஜெகதீசன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபா அபாரஜித் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சஞ்சய் யாதவ் கடைசி வரை நின்று 31 ரன்கள் எடுத்தார்.

TNPL 2023 இன்று நடக்கும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் பலப்பரீட்சை!

கடைசி ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்தார். அபிஷேக் தன்வார் வீசிய அந்த ஓவரில் மட்டும் அவர் 4 நோபால் மற்றும் ஒரு வைடு உள்பட 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும், ஒரு விக்கெட் கைப்பற்றினார். இப்போ முடியும், அப்போ முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த ஓவரில் மட்டும் 11 பந்துகள் வீசியுள்ளார்.

3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியாவின் முதல் டெஸ்ட் சீரிஸ் அறிவிப்பு!

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 217 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலமாக டிஎன்பிஎல் தொடரின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை சேப்பாக்கம் அணி எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து டிஎன்பிஎல் தொடரின் அதிகபட்ச ரன்னை பதிவு செய்துள்ளது.

காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே: பந்து மீது மோதிரம் வைத்து நிச்சயதார்த்தம்!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

பாபா அபரஜித் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ராஜகோபால் சதீஷ், உதிரசாமி சசிதேவ், பிரதோஷ் பால், எம் விஜூ அருள், எஸ் ஹரிஷ் குமார், சஞ்சய் யாதவ், ராமலிங்கம் ரோகித், ராஹில் ஷா, எம். சிலம்பரசன்

சேலம் ஸ்பார்டன்ஸ்:

கௌசிக் காந்தி (கேப்டன்), எஸ் அபிஷேக், ஆர் எஸ் மோகித் ஹரிஹரன், அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), மான் கே ஃபாப்னா, சன்னி சந்து, அபிஷேக் தன்வர், முகமது அத்னான் கான், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி, ஆகாஷ் சும்ரா.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios