Asianet News TamilAsianet News Tamil

உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற இலங்கை; நவம்பர் 2ல் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

Sri Lanka Qualified for ICC Mens Cricket World Cup 2023 in India
Author
First Published Jul 2, 2023, 7:07 PM IST | Last Updated Jul 2, 2023, 7:07 PM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா நடத்தும் போட்டி என்பதால், இந்தியா நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இதையடுத்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

ஆட்டம் காட்டிய சுரேஷ் குமார், ஷாருக்கான்: லைகா கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு!

இதைத் தொடர்ந்து கடைசி 2 இடத்திற்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாள், அமெரிக்கா, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமீரகம் ஆகிய அணிகள் மோதின. இதில், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமீரகம், அமெரிக்கா, அமெரிக்கா, நேபாள் ஆகிய அணிகள் தகுதிச் சுற்றின் லீக் போட்டிகளிலேயே வெளியேறின.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உடன் பலப்பரீட்சை: ஜெயிச்சா இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்!

இதில், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் மோதின. இதில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து ஓமன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலகக் கோப்பைக்கான தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறின.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்ஜாய்மெண்ட் தான் – இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் கன்ஃபார்ம்!

இந்த நிலையில், தான் உலகக் கோப்பைக்கான கடைசி 2 இடங்களுக்கு இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில், தான் இன்று ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் சிக்ஸ் 4ஆவது போட்டி நடந்தது.

 

 

நா ரெடி பாடலுக்கு... அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் மாஸ் ஆக நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் மட்டும் நிதானமாக ஆடி 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராசா 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறவே ஜிம்பாப்வே அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது.

அக்டோபர் 15 என்ன ஸ்பெஷல்? இந்தியா – பாகிஸ்தான் போட்டி அப்போது நடத்தப்பட காரணம்?

பந்து வீச்சைப் பொறுத்த வரையில் இலங்கை அணியில் மகீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மதீஷா பதிரனா 2 விக்கெட்டுகளும், ஷனாகா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷாங்கா அதிரடியாக ஆடி 102 பந்துகளில் 14 பவுண்டரி உள்பட 101 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். திமுத் கருணாரத்னே 30 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இலங்கை அணி 33.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டியிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கான 9ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இதன் மூலமாக இலங்கை அணி நவம்பர் 2 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்தப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios