12 போட்டியிலும் தோல்வி: இதென்ன இலங்கை அணிக்கு வந்த சோதனை!
இந்தியாவுக்கு எதிராக நடந்த 12 டி20 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 37 ரன்களும், ஹர்திக் பாண்டியா 29 ரன்களும், தீபக் கூடா 41 ரன்களும், அக்ஷர் படேல் 31 ரன்களும் எடுத்தது.
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி இவ்வளவு மிஸ்டேக் செய்திருக்கா?
இந்த டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், இந்தப் போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு 22 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில், 14 டாட் பால் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், ஒரு வைடு கூட வீசவில்லை. அதே போன்று ஒரு நோ-பால் கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக 155 கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்!
இதையடுத்து 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், எவ்வளவோ போராடியும் இலங்கை அணியால் 162 ரன்கள் எடுக்க முடியவில்லை. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை அணி வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்: ஆர்த்தோ மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டுமா?
ஆனால், இதுவரையில் இந்தியாவில் நடந்த டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இலங்கை அணி வெற்றி பெற்றதில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடந்த 12 டி20 போட்டிகளில் இலங்கை அணி அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை புனே மைதானத்தில் தொடங்குகிறது.
தோனியை பிசிசிஐக்கு பரிந்துரை செய்த முன்னாள் பெங்கால் வீரர் பிரகாஷ் போத்தார் காலமானார்!