ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!
கார் விபத்தில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லி - டேராடூன் சாலையில் காரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் வேகமாக தடுப்பில் மோதி பலமுறை சுழன்று விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. ஆனால், அதற்குள்ளாக கார் ஜன்னலை உடைத்து வெளியே வர ரிஷப் பண்ட் முயற்சிக்க, அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தோனியை பிசிசிஐக்கு பரிந்துரை செய்த முன்னாள் பெங்கால் வீரர் பிரகாஷ் போத்தார் காலமானார்!
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயங்கள் அதிகமிருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது லேசாக கண் அசந்துவிட்டதாகவும், அதனால் தான் கார் விபத்துக்குள்ளானதாகவும் ரிஷப் பண்ட் தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட்டுக்கு தலையில் பலத்த அடிபட்டிருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் அவருக்கு தலையில் எந்த பிரச்னையும் இல்லை என்பது எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிய வந்தது.
ரிஷப் பண்ட்டின் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகள் முழுமையாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளை மற்றும் முதுகுத்தண்டு ஆகிய 2 முக்கியமான பாகங்களிலும் எந்த பிரசனையும் இல்லை என்று தெரியவந்தது. முழங்கால் மற்றும் கணுக்காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. நெற்றி, புருவம் ஆகிய பகுதிகளிலும் காயம் கடுமையாக உள்ளது. அதற்கெல்லாம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காயம் காரணமாக ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவார் என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை மும்பைக்கு மாற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கு, விளையாட்டு மருத்துவத்திற்கான மையம், மற்றும் இயக்குனர் - ஆர்த்ரோஸ்கோபி மற்றும் தோள்பட்டை சேவையின் தலைவர் டின்ஷா பர்திவாலாவின் நேரடி பராமரிப்பில் இருப்பார். மேலும், அறுவை சிகிச்சை மற்றும் தசைநார் கிழிதலுக்கான பரிசோதனை என்று அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார். ரிஷப் பண்ட் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் பிசிசிஐ மருத்துவ குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், இந்த காலகட்டத்தில் ரிஷப் பண்ட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ செய்து கொடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷிவம் மாவி 4 விக்கெட்: கடைசில சொதப்பியும் காப்பாத்திக் கொடுத்த அக்ஷர்: இந்தியா த்ரில் வெற்றி!